suvaiyon suvai- உருளைக்கிழங்கு - கத்திரிக்காய் வறுவல்

         
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 
உருளைக்கிழங்கு - கத்திரிக்காய்  வறுவல்
         
சமர்ப்பணம் திருமதி. கிருஷ்ணவேணி
  உருளைக் கிழங்கு - 350 கிராம்
தக்காளி            -3
பெரிய வெங்காயம் 2
கத்திரிக்காய்        200 கிராம்
சோம்பு              1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1தேக்கரண்டி
சாம்பார்  பொடி - ஒரு மேஜைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சோயா சாஸ் 1   தேக்கரண்டி
  
செய்முறை 

கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து  நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது  நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து  தக்காளி குழையும் வரை வதக்கவும் இத்துடன்  உருளைகிழங்கை  (வேகவைத்ததை)  சேர்த்து கத்திரிக்காய் நீள வாக்கில் நறுக்கி  (வேகவைத்ததை)  சேர்த்து       கொண்டு சாம்பார்  பொடி, உப்பு சேர்த்து  கடைசியாக சோயா சாஸ் ஊற்றி நன்கு  கிளறி இறக்கவும்.

சுவையான எளிதில் செய்யக்கூடிய உருளை ப்ரை ரெடி. குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். தக்காளி சாதம், சாம்பார் சாதத்திற்கு ஏற்ற ஜோடி.

குறிப்பு : 1சாம்பார்பொடி கடையில் விற்கும் பொடி அல்ல சாம்பார் பொடி               பற்றிய குறிப்பினை என்னுடைய இதர இடுகைகளில் பார்க்கவும்.
         2.உருளைக் கிழங்கையும் கத்திரிக்காய்  னையும் தனித்தனியாக                  வேகவைக்கவும்  

No comments:

Post a Comment