இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
உருளைக் கிழங்கு வறுவல்
| சமர்ப்பணம் திருமதி. கிருஷ்ணவேணி |
உருளைக் கிழங்கு - 350 கிராம்
சிக்கன் 65 பொடி - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கி வைத்த உருளை தேவையான அளவு உப்பு சேர்த்து வேகும் வரை விடாமல் வதக்கவும் கை விடாமல் வதக்கி கொண்டே இருக்கவும் இல்லையெனில் அடிப்பிடிக்கும்.
உருளைக் கிழங்கு வெந்ததும் சிக்கன் 65 பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
.(அல்லது உருளைகிழங்கை வேகவைத்து வைத்து கொண்டு சிக்கன் 65 பொடி , உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.)
சுவையான எளிதில் செய்யக்கூடிய உருளை ப்ரை ரெடி. குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். தக்காளி சாதம், சாம்பார் சாதத்திற்கு ஏற்ற ஜோடி.
No comments:
Post a Comment