suvai suvai-உருளைக் கிழங்கு வறுவல் - தக்காளி- பெரிய வெங்காயம்

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 

உருளைக் கிழங்கு வறுவல் 
சமர்ப்பணம் திருமதி. கிருஷ்ணவேணி
உருளைக் கிழங்கு - 350 கிராம்
தக்காளி            -3
பெரிய வெங்காயம் 2
இஞ்சி பூண்டு விழுது 1தேக்கரண்டி
சாம்பார்  பொடி - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சோயா சாஸ் 1   தேக்கரண்டி

செய்முறை 

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது 1நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து  தக்காளி குழையும் வரை வதக்கவும் இத்துடன்  உருளைகிழங்கை (வேகவைத்ததை)சேர்த்து கொண்டு சாம்பார்  பொடி, உப்பு சேர்த்து  கடைசியாக சோயா சாஸ் ஊற்றி நன்கு  கிளறி இறக்கவும்.

சுவையான எளிதில் செய்யக்கூடிய உருளை ப்ரை ரெடி. குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். தக்காளி சாதம், சாம்பார் சாதத்திற்கு ஏற்ற ஜோடி.
கு'றிப்பு : சாம்பார்பொடி கடையில் விற்கும் பொடி அல்ல சாம்பார் பொடி பற்றிய குறிப்பினை என்னுடைய இதர இடுகைகளில் பார்க்கவும் 

No comments:

Post a Comment